பிசியோதரப்பிஸ்ட் (Physiotherapist) மற்றும் YouTuber ஆகிய நான் எனக்கு தெரிந்த தகவல்களை உங்களுடன் பகிர விரும்புகிறேன். மேலும் இந்த பாடப்பிரிவை படிக்க விரும்பும் அனைவருக்கும் இந்த தகவலானது பயணளிக்கும் என நம்புகிறேன்.
பிஸியோதரப்பி என்பதற்கு இயன்முறை மருத்துவம் அல்லது முட நீக்கியல் மருத்துவம் என்பது தமிழ் விளக்கமாக்கும். முன்பெல்லாம் இந்த துறையை தேர்வு செய்து படிப்பவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்த நிலையில் இன்றைய காலகட்டத்தில் அதாவது நீட் எக்ஸாம் வந்த பிறகு எம்.பி.பி.எஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புகள் கிடைக்காத மாணவர்கள் பிஸியோதரப்பியை தேர்வு செய்து படிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் இந்த துறையை பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே வேகமாக பரவி வருவதும் ஒரு காரணமாகும்.
பிசியோதரப்பி துறையில் உடல் வலிகள் மற்றும் பக்கவாதம், முகவாதம் போன்ற பல்வேறு உபாதைகளுக்காக சிகிச்சை முறைகள் அடங்கும்.
இந்த துறையை தேர்வு செய்து படிக்க தகுதிகள் (Eligibility) என்ன என்பதை பார்க்கலாம்.
- 12-ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- சராசரி மதிப்பென்னாக 50% கடந்திருக்க வேண்டும்.
- நோயாளிகளை கையாள உடல் தகுதியும் ஓரளவு தேவைப்படும்.
- சகிப்பு தன்மையும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கால அளவு :
இந்த பிஸியோதரப்பியின் முழு பாடங்களையும் முடிப்பதற்கு நான்றரை (4 1/2 ) ஆண்டுகள் ஆகும். மேலும் ஐந்து வருடங்களாக நீட்டிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது.
கல்லூரி கட்டணம் :
இந்த முழு கல்வி ஆண்டையும் முடிப்பதற்கு ஒரு ஆண்டுக்கு ஒரு லட்சம் வீதம் நான்கரை ஆண்டுகளுக்கு ஐந்து லட்சம் முதல் ஆறு லட்சங்கள் ஆகும். (5,00,000₹-6,00,000₹). இதில் ஹாஸ்டல் மற்றும் புக்ஸ் யூனிபார்ம் அடங்காது.
இதுவே கவுன்சிலிங்-இல் அரசாங்க கல்லூரிகலில் உங்களுக்கு இடம் கிடைத்தால் இலவசமாகவே படிக்கும் வாய்ப்பானது உங்களுக்கு கிடைக்கும்.
இதில் கவனிக்கப்படவேண்டிய முக்கியமான விஷயம் கல்லூரிகளை தேர்வு செய்யும் போது அந்த கல்லூரியானது முறையான யூனிவர்சிட்டி-இல் பதிவு செய்யப்பட்டிருக்கிரதா என்பதை உறுது செய்து கொள்ளுங்கள்.
பாட விவரங்கள்: (For Physiotherapist)
முதலில் உடற்கூரியல் மற்றும் உடல் இயக்கவியல் பாடமானது இந்த பாடத்திட்டத்தில் முன்னிலை வகிக்கிறது.
மேலும் எக்சசை தரப்பி மற்றும் உளவியல் பாடங்களும் இதில் அடங்கும். இவை அனைத்தும் கடினமான பாடங்களா என்று கேட்டால் அது உங்கள் ஆர்வத்தை பொறுத்தது.
பதவிகள்:
- பிஸியோதரப்பிஸ்ட் (Physiotherapist)
- விருவுரையாளர்
- விளையாட்டு பிஸியோ சிகிச்சையாளர்
- மருவாழ்வு சிகிச்சையாளர்
- தனிப்பட்ட பயிற்சியாளர்
- கிளினிக்கல் பிஸியோதரப்பிஸ்ட்
- ஆசிரியர்
மாதாந்திர சம்பள விவரம்:
தமிழ் நாட்டில் உள்ள மருத்துவ மனைகளில் (Physiotherapist) வேலை செய்தால் குறைவான வருமானமே கிடைக்கும். மாறாக பக்கத்து மாநிலங்களில் பணிபுரிவதன் முலம் 25,000₹ ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் வெளிநாடுகளில் பணிபுரியும் போது வருமானம்(1,00,000-2,00,000₹)ஒன்றிலிருந்து இரண்டு லட்சங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
மேற்படிப்புகள்:
நீங்கள் இந்த நான்கரை வருட இளநிலை படிப்பை முடித்துவிட்டு உங்களுக்கு விருப்பம் இருந்தால் முதுநிலை படிப்புகளை (எம்.பி.டி) மேற்கொள்ளலாம்.
இதன் மூலம் பிஸியோதரப்பி பாடப் பிரிவை பற்றி ஓரளவுக்கு தெரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். மேலும் இதை போன்ற பாடப்பிரிவுகளுக்கான தகவல்களுக்கு எங்களுடன் இணைந்திருங்கள்.
நன்றி..